இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/27/2013

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கவிதை நூல் வெளியீடு


சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் 2ம் வருட நாடக அரங்கியல் துறை மாணவன் வன்னி இ.சயந்தன் அவர்கள் 26.07.2013 அன்று 'அன்புடன் பூங்காற்று' எனும் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி. பிரேம்குமார் அவர்களும் சிறப்பு அதிதியாக சிரேஸ்ட உதவிபதிவாளர் திரு. கிறிஸ்டி அவர்களும் மற்றும் இணைப்பாளர்களான திரு.மோகனதாஸன், திரு.பிரகாஸ், திருமதி ஜெயகீஸ்வரன் போன்றோர் சிறந்து சிறப்பித்தனர். ஏனைய விரிவுரையாளர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை நிறுவகத்தின் இந்து மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.  சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கவிதை நூல் வெளியீடு இதுவே முதல் தடவை என்பதும் வன்னி இ.சயந்தன் அவர்களின் முதல் வெளியீடு என்பதும் சிறப்பம்சமாகும். விரிவுரையாளர்களும் அதிதிகளும் இவருடைய முயற்சியினை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா