(ஹனீபா)
சர்வதேச அரிமா கழகத்தின் 306 சீ2 மாவட்டத்தின் 2013/2014 வருடத்தக்கான புதிய ஆளுனர் சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் கீழுள்ள அரிமா கழகத்தின் தலைவர்கள்,செயலாளர்கள் ,பொருளாளர்கள் மற்றும் அங்கத்துவ பணிப்பாளர்களுக்கான பதவிப்பிரமானமும், நியமனம் வழங்கல்; சின்னங்கள் சூட்டல் மற்றும் மேலங்கிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (27) மாலை 4.30க்கு ஆரம்பமாகி இன்று (28) அதிகாலை வரைக்கும் கொழும்பு பெரலஸ்கமுவ கோல்டன் றோஸ் ஹொட்டலில் நடைபெற்றது.
2013/2014ம் 306 சீ2 மாவட்டத்தின் பதிய ஆளுனர் லயன் லசந்த பெரேரா. எம்.ஜே.எப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக அரீமா கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவரும் முன்னாள் கொமர்சியல் வங்கியின் தலைவருமான லயன் மஹேந்திர அமரசூரிய கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக சர்வதேச அரிமா கழகத்தின் பின்லாந்து நாட்டுக்கான ஆளுணர் லயன் ஏர்கிளைன், திருமதி லயன் சீமாட்டி ஏர்கிளைன், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் ஆளுனர் லயன் சிங்கரத்ணம் உட்பட முன்னாள் ஆளுனர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொணடனர்.








0 comments:
Post a Comment