இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/30/2013

கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் அம்பாறை மாவட்ட கூட்டம்


(அகமட் எஸ். முகைடீன்,ஹனீபா)
கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் அம்பாறை மாவட்ட கூட்டம் நேற்று (29.07.2013) அக்கரைப்பற்று ரி.எப்.சி மண்டபத்தில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் தலைமையில்  நடைபெற்றது.

சமச்சீரான நிலைப்பேறுடைய அபிவிருத்திக்கு பொருத்தப்பாடுடைய நிகழ்ச்சித் திட்டங்களை நெறிப்படுத்துவதற்குமான தேவையினைக் கருதி மக்களினது அபிலாஷைகள் மற்றும் புதிய சிந்தனைகளை உள்வாங்கி மாகாண நிகழ்ச்சித்திட்டங்களாக மாற்றுவதற்கு வசதியாக மாகாண அபிவிருத்தி அரங்கங்களை நடாத்துவதற்கு அமைச்சர் வாரியம் தீர்மானித்திருந்தது. அரசியல் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் போன்றோர் மாகாண திணைக்கள தலைவர்களுடன்   கொள்ககை ரீதியான தீர்மானங்கள் மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சித் திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை முழுமையாகக் கொண்டுவருவதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களினதும் நன்மையை நோக்காகக்  கொண்டு ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு சுமூகமான சூழலை உருவாக்கும் வகையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.
   
இங்கு அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் மாநகர, நகர, பிரதேச சபைகளின் தலைவர்களினால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கல்முனை மாநகர சபை கட்டிடமானது 1953ம் ஆண்டு கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் காலப்பகுதியில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படும் கட்டிடமாக காணப்படுகிறது. எனவே​ இதற்கான நிர்வாக கட்டிட நிர்மானம் தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்ட நிதி ஒதுக்கீடுகளில் நிதி ஒதுக்கப்படாமை தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்டுகின்ற பி.எஸ்.டி.ஜி நிதியின் அளவு மக்கள் பரம்பலுக்கு அமைவாக வழங்கப்படுவதில்லை என்பதனால் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களிற்கு பங்கிடுவதில் பிரச்சினைகள் நிலவுகின்றது. இதனால் அந்நிதியின் அளவை அதிகரிக்குமாறும் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை எதிர் கட்சித் தலைவர், உறுப்பினர்கள், மாநகர, நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள், பிரதம செயலாளர் டி.எம்.சறத் அபேகுணவர்தன, பேரவைச் செயலக தவிசாளர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா