கண்டியில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 23 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (10) இரவு 8.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா - எடின்புரோ (கண்டிதுறை) தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய துறைராஜ் மேனகா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் தனது சகோதரருடன் இடம்பெற்ற கையடக்கத் தொலைபேசி குறித்த பிரச்சினை என தெரியவந்துள்ளது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Bas AD







0 comments:
Post a Comment