(அகமட் எஸ்.
முகைடீன்)
கல்முனை பிர்லியன்ட்
விளையாட்டுக் கழகத்தின் 300வது சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி மாவனல்லை யுனைட்டட்
விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இன்று (23.08.2013) மாலை சந்தாங்கேணி விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றது.
பிர்லியன்ட்
விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 22 வருட காலத்தில் நடைபெற்ற இந்த 300வது
உதைபந்தாட்ட போட்டியில் 4:0 என்ற கோள் கணக்கில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம்
வெற்றியீட்டியது.
இவ்வுதைப்பந்தாட்ட
போட்டியின்போது பார்வையாளர்களுக்கு இலவச கூப்பன் வழங்கப்பட்டு குழுக்கல் முறையில்
தெரிவு செய்யப்பட்ட அதிஷ்டசாலிக்கு சிறுவருக்கான துவிச்சக்கர வண்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது.
இதன்போது இப்பிரதேசத்தின்
உதைபந்தாட்ட விளையாட்டு துறை வளர்ச்சிக்காய் சேவையாற்றிய விளையாட்டு ஆசிரியர்
எம்.ஐ.ஏ.நசாரிற்கு பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டார். அத்தோடு இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு
நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
பிர்லியன்ட்
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில்
பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான
ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், சிறப்பு அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல்
ரஸ்ஸாக், மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின்
தலைவரும், சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர்
எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment