(அகமட் எஸ்.
முகைடீன்)
ஆசிய மன்றத்தின்
அனுசரனையில் கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் மருதமுனை பிரதேச இறைச்சிக்கடை
உரிமையாளர்களுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும் இன்று (01.08.2013) மருதமுனை
மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்
தலைமையில் நடைபெற்றது.
ஆசிய மன்றத்தின்
நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
மௌலவி எம்.ஐ.ஹூசைனுதீன் றியாலியினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை
மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.றைஸ்,
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருதமுனையில் உள்ள சகல பள்ளிவாசல்களின் தலைவர்கள்,
செயலாளர்கள் மற்றும் மருதமுனை இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.








0 comments:
Post a Comment