அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் அநுராதபுரம் மாநகர சபையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த பள்ளிவாசல் தொடர்பில் கடந்த பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்துள்ளது.
எனினும், இந்த பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அநுராதபுரம் மாநகர சபை தீர்மானித்துள்ளது.
புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பள்ளிவாசல் உள்ள பிரதேசம் உள்ளடக்கப்படுகின்ற காரணத்தினாலேயே இந்த பள்ளவாசல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு குறித்த பிரதேச முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும் புனித நோன்பு காலம் என்பதனால் குறித்த தீர்மானத்தை சில நாட்களுக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையிலேயே மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் இன்று அகற்றப்பட்டுள்ளது.
இந்த அகற்றல் தொடர்பில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் அநுராதபுரம் மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
குறித்த பள்ளிவசால் மீது கடந்த வருடம் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் மற்றொரு நாளும் என இரண்டு தடவைகள் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment