(AD)
பொன்டேரா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சுகாதார சேவைகள் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பால் மாவில் டிசிடி பதார்த்தம் இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ள நிலையில் தமது நிறுவன உற்பத்தி பால்மா சிறந்தது என பென்டேரா நிறுவனம் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொன்டேரா நிறுவன பால் மா தொடர்பிலான விளம்பரங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள போதும் அந்த உத்தரவை மீறி நிறுவன உற்பத்திகள் விளம்பரப்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தமது நாட்டு பால் மாவில் இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளதெனவும் பொன்டேரா நிறுவன பணிப்பாளர் பதவி விலகியுள்ளதாகவும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.
ஆனால் இலங்கையை சேர்ந்த அந்நிறுவன பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்ய முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment