இலங்கைக்கான துருக்கி
நாட்டு தூதுவர் இஸ்கன்டர் கே. ஒக்கியேவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது சுனாமியின்
பின்னரான கல்முனை மாநகர வாழ் மக்களின் இயல்பு நிலை, மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மாநகரின் எதிர்கால திட்டம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக சுனாமியின் பின்னர் பெற்றோரை இழந்த சிறுவர்கள் மற்றும் கணவனை இழந்த
விதவைகளின் வாழ்வாதாரம், கல்வி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இலங்கை
முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அண்மைக்கால இன அடக்குமுறைகள்
மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டது.
கல்முனை நகரினை
துருக்கியின் தலை நகரமான இஸ்தான்புல் நகருடன் இணைப்பது தொடர்பிலும் இதற்காக கல்முனை
மாநகர முதல்வர் உள்ளிட்ட குழு இஸ்தான்புல் நகரிற்கு விஜெயம் மேற்கொள்வது தொடர்பாகவும்
விரிவான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது. அண்மையில் துருக்கி தூதுவர் இஸ்தான்புல்
செல்லவிருப்பதாகவும் அதன்போது இதுதொடர்பான அழைப்பினை அங்குள்ள முதலவரூடாக
மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு கல்முனை
மாநகர தேவைப்பாடுகள் தொடர்பான மகஜர் ஒன்று இதன்போது முதல்வரினால் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment