(அகமட் எஸ்.
முகைடீன்)
ஆசிய மன்றத்தின்
அணுசரனையில் கொய்கா நிறுவனத்தினால் கல்முனை மாநகரிற்கான வாகன தரிப்பிடம்
அமைப்பதற்கான பிரேரனை திட்டம் கையளிக்கும் நிகழ்வு முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் தலைமையில் இன்று (15.08.2013) முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
ஆசிய மன்றத்தின்
நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் கொரிய நாட்டின் சியங்கோல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கொரிய நகர
அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனத்தின் ஆலோசகருமான கியோங் சூ லிம்மினால் மேற்படி
பிரேரனைத் திட்டம் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
கல்முனை வர்த்தக
சமூகத்தினர் முதல்வரிடம் விடுத்த வேண்டுகோலின் பேரில் குறித்த வாகன தரிப்பிடம் கல்முனை
நகர மத்தியில் அமைக்கப்படவுள்ளது. மேற்படி வாகன தரிப்பிடத்திற்கான முதல் கட்ட
நிதியாக கொய்க்கா செயல்திட்டத்தினால் ரூபா 3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கல்முனை
மாநகரினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால
நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை
மாநகரில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிய
மன்றத்தின் அதிகாரி மின்யொங் கிம், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர்
ஹலீம் ஜௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment