(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்திலுள்ள அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக முஸ்லீம் சமய கலாசார அலவல்கள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட இலவச சீருடைத்துணி வழங்கும் வைபவம் இன்று (03) மாலை சம்மாந்துறை இக்றாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.எல்.பைஷhல் தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின்
சம்மாந்துறைக் கிளையின் தலைவர் அப்துல்காதர் விNஷட அதிதியாக கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எல்.மன்சூர், அக்கறைப்பற்று வலயத் தலைவர் மௌலவி எம்.எம்.முபீஸ், செயலாளர் மௌலவி எஸ் றிபாஸ்தீன், கல்முனை வலயத் தலைவர் மௌலவி சுபைர் நளீமி, சம்மாந்துறை வலையத் தலைவர் எம்.எம்.ஜூனைட் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
இவ்வைபவத்தின் பொது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 975 ஆசிரியர்களுக்கு இந்த இலவச சீருடைத்துணிகள் வழங்கி வைக்கப்பட்டன இவற்றில் பெண் ஆசிரியர்களுக்கான ஹபாயா சீருடைத்துணி 571 பேருக்கம், ஆண் ஆசிரியர்களுக்கான காற்சட்டை மற்றும் சேட் துணிகள் 404 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.








0 comments:
Post a Comment