சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்த வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டு, அவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று 20-08-2013 வெளியிடப்பட்டது.
அதில், ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி விட்டு நவம்பர் 14ம் தேதி காரைக்காலில் இருந்து சென்னை திரும்ப பேருந்து நிலையத்துக்கு வந்த வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினான். இதில் படுகாயம் அடைந்த வினோதினி, மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment