(ஹனிபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ;'புறநெகும' வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கிராமிய சிறு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தில் 12 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விலங்கு கொல்களத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறைப் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும்;, ஜனாதிபதி அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக உதவி தவிசாளர்; ஏ.கே.றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான பி.தியாகரன், சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.எம்.றனூஸ், ஏ.ஜீ.அஹமட் சிப்லி, ஏ.பி.அச்சுமுஹம்மட் மற்றும் சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்த கொண்டனர்.
ஆரம்பத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான விலங்கு கொல்களம் சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில் கல்லரிச்சல் பிரதேசத்தில் நிறுவப்பட்டு இதுகாலவரைக்கும் இயங்கி வந்தது. தற்போது இப்பிரதேசம் மக்கள் செரிந்து வாழும் பிரதேசமாக மாற்றம் பொற்றதனாலும்; அப்பிரதேச பொதுமக்களின் சுகாதார மற்றும் பொதுவசதி கருதியும் இந்த விலங்கு கொல்களம் மக்கள் வசிக்காத வயல் நிலப்பிரதேசமான பாம் வட்டைஎனும் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment