இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/06/2013

உலகின் மிக குட்டையான சகோதரர்கள்


அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

இவரது உயரம் வெறும் 27 அங்குலம்தான். பிரிட்ஜெட் ஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜார்டனுக்கு 20 வயது. 

பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன் பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம். 

இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சீயர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். 

பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மேஜிக் என்று பல விஷயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். 

28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார், பிரிட்ஜெட். 

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் வெறும் 24 அங்குலம். 

அவர் கடந்த 1895-ம் ஆண்டு தனது 19-வது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா