(Ad)அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையுடனான கூட்டுறவு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்த நியூசிலாந்தின் பொன்டேரா பால் மா உற்பத்தி நிறுவனம் மீண்டும் இன்று (28) முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
பொன்டேரா உற்பத்தி பால் மாவின் டிசிடி எனப்படும் இரசாயன பதார்த்தம் உள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, பொன்டேரா உற்பத்திகளுக்கு தடை விதித்து கம்பஹா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் பின்னதாக கடந்த 23ஆம் திகதி இந்த தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமது நிறுவனத்தின் 755 சேவையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் இலங்கையில் உள்ள எமது பண்ணைகள் மற்றும் அலுவலகங்களை மூடி வைக்க தீர்மானித்ததாக பொன்டேரா நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நிறுவன உற்பத்திகளுக்கெதிரான தடை நீக்கப்பட்டு, உற்பத்தி பொருட்களில் ரசாயன கலப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமது நிறுவன பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்ததாக பொன்டேரா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment