இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/14/2013

ஆஷஸ் தொடர் இங்கிலாந்து வசமானது


அவுஸ்திரேலியாவுடனான நான்காவது ஆஷஸ் ரெஸ்ட் போட்டியை 74 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது. இதன்மூலம் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை 3-0 என முன்நிலை பெற்றுள்ளது. 

செஸ்டர் லெ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

எனினும் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 68.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களையே பெற்றது. ஆரம்ப வீரர் டேவிட் வோனர் அதிகபட்சமாக 71 ஓட்டங்களைப் பெற்றார். 

அபாரமாக பந்துவீசிய ஸ்டுவட் புரோட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது ரெஸ்டில் அவர் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 238 ஓட்டங்களையே பெற்றது. 

தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 270 பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்டு 330 ஓட்டங்களை பெற்றது. 

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் ஒன்றை 3-0 என கைப்பற்றி இருப்பது 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது முதல் முறையாகும். அதேபோன்று ஆஷஸ் தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து 3-0 என முன்னிலை பெற்றிருப்பது 1928-29 தொடருக்குப் பின் இது முதல் முறையாகும். 

இதன்படி கடைசி ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அது 4-0 என தொடரைக் கைப்பற்றும். ஆஷஸ் வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை தொடரை 4-0 என வென்றதில்லை.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா