பொதுவாக மழலைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்குமே மடியில் தலை வைத்துத் தூங்குவது என்றால் அலாதி பிரியம் தான்.
இப்படி மடி பிரியர்களுக்காக தயாரானது தான் இந்த புதிய வகை தலையணை. ஜப்பானில் சந்தைக்கு வந்துள்ள இந்த தலையணைகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு தூக்கம் வந்தால் அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த தலையணைகளாம்.
டோக்கியோ விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த தலையணைகளின் அமைப்பே வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் தொடையை நினைவு படுத்துகிறது இந்த தலையணைகள்.
குட்டிப்பாப்பாவிற்கு தனது தாயின் மடியில் படித்திருக்கும் சுகத்தை தருகிறதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மன பாரமான நேரங்களில் தாயின் மடியைத் தேடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த தலையணைகள் சுகமான ஆறுதலான உணார்வைத் தருமாம்.
விமான நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் விளையாட்டாக தனது நண்பர்களுக்கு, தோழிகளுக்கு அன்பளிப்பாகவும் இதை வாங்கிச் செல்கிறார்களாம்.
சில நேரங்களில் அனைவருக்குமே வீட்டில் படுத்திருப்பது போன்ற உணர்வு தேவைப்படும். அதுபோன்ற நேரங்களில் இந்த தலையணைகளை உடன் எடுத்துச் சென்று ஹோம்சிக்கை தவிர்த்துக் கொள்ளலாம் என ஆலோசனைக் கூறுகிறார்கள் இந்தக் கடைகாரர்கள்.
மென்மையாக, தொடுவதற்கு எலாஸ்டிக் தன்மையுடன் காணப்படுவது இத்தலையணையின் சிறப்பு அம்சம். பாலியுரித்தேன் மெத்தையில், பாலிஸ்டர் ஸ்கர்ட் போட்ட பெண்ணின் தொடை போன்று காட்சி அளிக்கிறது.
சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் இந்த தலையணைகளில் தலை வைத்து தூங்குவது மனைவி அல்லது அம்மாவின் மடியில் படுப்பது போன்ற சுகத்தை தருவதாக பயன்படுத்தியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment