(ஹனீபா)
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் இப்தார் நோன்பு திறக்கும்; நிகழ்வு நேற்று (07) சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வளாகத்தில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஸித் ரோஹன, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான தென்னக்கோண், நிசாந்த சந்திரசேகர, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், காரைதீவு பிரதேச சபையயின் தவிசாளர், சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் கலீலுர்றஹ்மான், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், உட்பட சர்வமத தலைவர்கள், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், திணைக்களங்களினதும் உயர் அதிகாரிகள் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருமானம் குறைந்த குடும்பங்கள் சிலருக்கு உலர் உணவுப் பொதிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் குர்ஆண் மதரசா மாணவர்களுக்கு குhஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வைபவத்தின் போது மௌலவி கே.எம்.கே.ரம்ஸீன் அவர்களினால் நோன்பின் மாண்புகள் தொடர்பான விஷேட பாயான் நிகழ்த்தப்பட்டன.










0 comments:
Post a Comment