(ஹனீபா)
சண்டித்தனம் பேசுவதாலோ, பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவதாலோ மக்களிடையே ஏற்படும் முறுகல் நிலைகளைத் தீர்க்க முடியாது. இதய சுத்தியான பேச்சும், பிரார்த்தனையும் வேண்டும்.
நிந்தவூரில் அமைச்சர் அதாஉல்லாஹ் சூளுரை.
'சண்டித்தனம் பேசுவதாலோ, பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவதாலோ மக்களிடையே ஏற்படும் முறுகல் நிலைகளைத் தீர்க்க முடியாது. இதய சுத்தியான பேச்சும், பிரார்த்தனையும் வேண்டும்.' என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீனின் ' வாழ்வின் ஒளி ' செயற் திட்டத்தின் கீழ் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (07) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகவும், மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அதாஉல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் இங்கு பேசுகையில்:
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறுகள் நிறைய உண்டு. அதேபோல் காலத்திற்குக் காலம் இம்மக்களிடையே சிற்சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவைகளைக் கண்ணியமான முறையில் பேசித்தான் தீர்த்துள்ளனர். அதை விட்டு விட்டு பெரிதாக சண்டித்தனம் பேசுவதாலும், பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவதாலும் தீர்வுகள் எட்டப்போவதில்லை. சில விடயங்களில் அதாஉல்லா பேசவில்லை என்பதால், அது தீர்வில்லை என்றாகாது. வேறு சிலர் பேசுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள் என்பதால், அது தீர்வும் ஆகாது. தீர்வென்பது வேறு. எனத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக் கோண், சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தஹாநயக்க, பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், முன்னாள் பிரதேச சபை உபதவிசாளர் பீ.உமர்கத்தா, எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெவ்வை உள்ளிட்ட உள்ளுர் அரசியல் தலைவர்கள் பலரும், நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வறிய குடும்பங்களுக்கு குழாய் மூலக் குடிநீர் பெறுவதற்கான காசோலைகள், பாலர் பாடசாலை அபிவிருத்த்pக்கான காசோலைகள் என்பன வழங்கப்பட்டதுடன், தையல் இயந்திரங்கள், விவசாயிகளுக்கான கிருமி நாசினி தெளிகருவிகள், மண்வெட்டிகள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற பல பொருட்களும் வழங்கப்பட்டன.
சுமார்; இருபது இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.








0 comments:
Post a Comment