இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/06/2013

சாய்ந்தமருது “ஏஜ் ஸ்டீல்” விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது “ஏஜ் ஸ்டீல்” விளையாட்டு கழகத்திற்கு இன்று (06.08.2013) கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார். 

விளையாட்டு கழகங்களை ஊக்கிவிக்கும் முதல்வரின் திட்டத்திற்கு அமைவாக மேற்படி உபகரணங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் எம்.கலாம் மற்றும் செயலாளர் எஸ்.றியால் ஆகியோரிடத்தில் கையளிக்கப்பட்டது.

இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எல்.ரீ,சாலிதீன், நிர்வாக உத்தியோகத்தர் அலாவுதீன், மாநகர சபை உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் மற்றும் விளையாட்டு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா