பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான வஸிம் அக்ரம் தனது அவுஸ்திரேலிய காதலியான ஷனீரா தொம்ஸனை திருமணம் செய்துகொண்டதாக இன்று புதன்கிழமை அறிவித்தார். பாகிஸ்தானின் லாகூர் நக ரில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி இத்திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 47 வயதான வஸிம் அக்ரமின் முதல் மனைவியான ஹுமா நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் 30 வயதான ஷனீரா தொம்ஸனை வஸிம் அக்ரம் திருமணம் செய்துள்ளார். ஷனீரா லாகூருக்குச் செல்வதற்குமுன், இம்மாத முற்பகுதியில் கராச்சிக்கு சென்று, அங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வஸிம் அக்ரமின் தந்தையை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.“கடந்த வாரம் எளிமையான வைபவமொன்றில் ஷனீராவை நான் திருமணம் செய்தேன். இது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகும்” என வஸிம் அக்ரம் கூறினார். தற்போது ஷனீரா தொம்ஸன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாகவும் அவர், உருது மொழியை கற்று வருவதாகவும் வஸிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment