(TM) 2013ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர்களின் பெயர்கள் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் பட்டியலை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர்களின் பெயர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாக்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 2240 கோட்டாக்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் 91 ஹஜ் முகவர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆகக்கூடிய 80 ஹஜ் கோட்டாக்கள் ஹாரா மற்றும் சேப்வே ஆகிய முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹஜ் குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முகவர் நிறுவனங்களுக்கும் ஹஜ் கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment