இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/23/2013

இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு


இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். 

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். 

ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், 

மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். 

இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா