இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/17/2013

சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்


(ஹனீபா)
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் அதிகாரிகளால் மாத்திரம் முடியாது பொதுமக்கள் அதாவது சிவில் சமுகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கயமாகும் அந்த அடிப்படையிலேதான சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரும் பதில் பொலிஸ் ஊடகப் போச்சாளருமான சட்டத்தரணி அஜித்ரோஹன தெரிவித்தார்.

ஆசிய மன்றத்தின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்தறை, சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக (15) ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் (ஐபி) தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் இன்று இருக்கும் நிலையிலிருந்து நான்கு வருடங்களை பின்னோக்கி பார்ப்போமாயின் பயங்கரவாதம் எனும் கொடிய செயற்பாட்டினால் நிம்மதி இழந்து, சொந்த பந்தங்களை இழந்து வயல்களுக்க செல்லமுடியாது, போக்குவரத்து செய்யமுடியாது, தொழிலுக்கு செல்லமுடியாமல், பாடசாலைக்கு செல்லமடியாது, மதக்கடமைகளை செய்ய வெளியில் செல்ல முடியாத நிலையில் நாளந்தம் பல உயிர்கள் இழக்கப்பட்டதை நாம் அறிவோம்  நாங்கள் இன்று அந்த இருண்ட யுகத்திலிருந்த விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.

அந்த நிலை மீண்டும் வருவதை நாம் ஒருவரும் விரும்ப மாட்டோம் ஆனால் இன்று இரண்டாவது பயங்கரவாதமாக வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டு செல்கின்றது இதனால் பொறுமதிமிக்க மனித உயிர்கள் இழக்கப்படுவதுடன் பலருடைய உடல் உறுப்புக்கள் ஊனமடைகின்றது. இந்த செயற்பாட்டிலிருந்த பெறுமதிமிக்க மனித உயிர்கள்; பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த வருடம் இலங்கையில் காணப்படுகின்ற 433 பொலிஸ் நிலையங்களில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திலேதான் ஆகக் கூடுதலான விபத்துக்கள் பதியப்பட்டுள்ளது. அதே போன்று இவ்வருடத்திலும் இதுவரைக்கும் ஆகக் கூடுதலான விபத்துக்களும் உயிரிழப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம், காரைதீவு, மாவடிப்பள்ளி, நெல்லுப்பிடி சந்தி போன்ற இடங்களில்கூடுதலான விபத்துக்கள் கூடுதலாக இடம்பெறுவதாகவும் தெரிவித்ததார்.

பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் கவனமாக இருக்க வெண்டும் இந்த நாடு தமிழர்,முஸ்லீம், சிங்களவர் சகலருக்கும் சொந்தமான நாடாகும் சகலருடைய பாதுகாப்பும் உறுதிப்படத்தப்பட வேண்டும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்தவெரு செயற்பாடுகளையும் நாம் அனுமதிக்க முடியாது சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அனைவரும் விளிப்புணர்வுடன் செயற்பாட வேண்டும் தங்களது பிரிவிலுள்ள மக்களிடத்தில் சென்று விளிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எந்தவொரு செயற்பாடுகள் நடைபெறுவதாயினும் அவை தொடர்பான விளிப்புணர்வும் உண்மைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடைபெற வேண்டும் இதற்கு மக்களை பயிற்றுவிக்க வேண்டும் களவுகள்,கொள்ளைகள், ஏமாற்று செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் இடம் வழங்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான காமினி தென்னக்கோன், நிஷஷாந்த சந்திரசேகர,பிரதேச செயலாளர்களான ஏ.எம்சூர், எஸ்.கரண், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் உமேஸ் தவராஜா, கெப்சே திட்டப்பணிப்பாளர் காமில் இம்டாட், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி இழங்ககோன்;, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பத்மசிறி, சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா