இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/03/2013

இருச்சக்கர வாகனத்தில் பயணித்தபடி தாய்ப்பால் கொடுத்த பெண் கைது


சீனாவில் ஒரு பெண், இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் ஓர் இளம்பெண் தனது 18 மாத ஆண் குழந்தையுடன் ’மொபட்’ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது குழந்தை பசியால் அழுததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடியே டி-சர்ட்டை விலக்கி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியுள்ளார். 

இது தாய்மைக்கே உரித்தான செயல் என்ற போதிலும், போக்குவரத்துப் பொலிசாரே அவரை தடுத்து நிறுத்தி மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர். 

‘குழந்தையின் உயிரை காப்பாற்ற அவர் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். ஆனாலும் விபத்து நேர்ந்தால் அவர் உயிர் மட்டுமின்றி, மற்றவர் உயிர் போய்விடும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம்’ என பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா