இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/05/2013

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளின் காலக்குறைப்பிற்கு எதிராக அணிதிரளும் மாணவர்கள்

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளின் காலக்குறைப்பிற்கு எதிராக அணிதிரள்வோம், சுகாதார பிரிவையும் சுதந்திரமான சுகாதார சேவையையும் பாதுகாப்போம்......

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறி  மாணவர்கள் என்ற வகையில் இன்று உங்கள் முன் வந்திருப்பது சுகாதார பிரிவு பற்றி கதைப்பதற்குஇ மனிதன் உட்பட அனைத்து மிருகங்களும் நோய்வாய்படுதல் சாதாரணமான ஒரு விடயமே...! ஆகவே நோயைக் குணப்படுத்தவும் அதைத் தடுப்பதற்கும் சுகாதார சேவையையும் அதை நடைமுறைப்படுத்த சுகாதார பிரிவும் உருவாகியுள்ளது. இந்த சுகாதார பிரிவில் பல விடயங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை. சுகாதார விஞ்ஞான கற்கை நெறி மாணவராக அதன் உள்விடயங்களை தெரியப்படுத்த வந்துள்ளோம்.

எங்களுக்கு எப்போது நோய் வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்போது நாங்கள் படும் வேதனை நமக்குத் தெரிந்ததே. இதனால்தான் சுகாதார சேவை மிக முக்கியம். உண்மையாகவே இன்று எமக்கு சுதந்திரமான சுகாதார சேவை உள்ளதா?? அனைத்திற்கும் பணம் தேவைப்படும் இவ்வுலகில் சுதந்திரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள முடிகிறதா?? இன்று வைத்தியசாலைக்கு வரும் எமது சொந்தங்கள் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்கிறார்களா? எத்தனை மருந்து வகைகளை மருந்தகங்களிலிருந்து பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும்?

அதுமட்டுமல்ல இன்று உலகளவில் பரந்து காணப்படும் போலியான மருந்து உற்பத்தி நிறுவனங்களால் பல நோய்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று நாம் உயிர்வாழ்வது அவர்களின் இலாபத்துக்கே. இந்த சமூக நிலைப்பாட்டால் எங்கள் வாழ்க்கையும் சுகாதார சேவையும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல் இந்த சமூகநிலை மாணவர்களாகிய எங்களுக்கும் பிரச்சனை கொடுக்கிறது. அதுதான்(3101) சாதாரண மற்றும் சிறப்புப் பட்டத்தினைப் பெறுவதில் ஏற்பட்ட காலக்குறைப்பு.

என்ன இந்த (3101) பிரச்சனை? 2006ம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தாதியியல், மருந்தகவியல், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், இயன் மருத்துவம்(Phலளழைவாநசயில), ஊடுகதிர் படமெடுப்பு ஆகிய கற்கை நெறிகள் சிறந்த பயனுள்ள சுகாதார சேவையை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டவை. உயர்தர உயிரியல் பிரிவு மாணவர்கள் உயர் ண-புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியிருப்பது நான்கு வருட விசேட பட்டத்தைப் பெறுவதற்கே (யாழ்ப்பாணம், பேராதனை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, உருகுணு மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகம்). ஆனால் 2010ம் ஆண்டிலிருந்து மேற்குறித்த கற்கை நெறிகள் 4 வருடத்திலிருந்து 3 வருடம் சாதாரண பட்டத்திற்கான கற்கைநெறி, ஒரு வருடம் சிறப்பு பட்டத்திற்கான கற்கை(3101) என மாற்றப்பட்டுள்ளது. இதுவே பிரச்சனைக்கான காரணமாகும்.

நான்கு வருட கற்கை நெறி அனைத்து மாணவர்களுக்கும் உரியதே. இருந்தபோதும் சுகாதார சேவையிலுள்ள நிர்வாகிகளின் சூழ்ச்சியால் விசேட பட்டத்தைப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. அதாவது சாதாரண பட்டத்திற்கான கற்கைநெறிக்காலத்தில் குறித்த சராசரிப்புள்ளிககு மேல் தேர்ச்சியடையத் தவறுகின்ற மாணவர்கள் சிறப்பு நிபுணத்துவப்பட்டத்துக்கான கற்கைகளை மேற்கொள்வதற்கான சந்தற்பத்தை இழக்க நேரிடும். இதனால் நான்காம் வருடத்தில் தாதியியல் மற்றும் ஏனைய சுகாதார விஞ்ஞான கற்கை நெறியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிபுணத்துவம்பெற முடியாமல்போகும்நிலையுள்ளது. இதுபற்றி மாணவர்கள் சுகாதார அமைச்சரிடம் வினவியபோது அவர் கூறியதாவது 'இது தன்னுடைய தவறில்லை எனவும் வேறுசில பகுதியினரால் ஏற்படுத்தப்பட்ட தவறெனவும்' கூறி கேள்வியிலிருந்து தப்பிக்கொண்டார்.
சுகாதார குழு என்பது அனைத்து சுகாதார சேவகர்களின் ஒன்றிணைப்பே. ஆனால் இவர்கள் இதனைப் புரியாமல் பிரிந்து செயற்படுவதனால் எங்கள் பிரச்சனைக்கான சரியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. இதுபோல் சுகாதார பிரிவில் பல பிரச்சனைகள் உருவாக்கப்பட்டது இனியும் உருவாக்கப்படும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றஇ கல்வியை தனியார்மயமாக்குவதன் மூலம் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற, எமது நோயால் இலாபம் பெறுகின்ற நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் இந்த நிர்வாகிகளுக்கு எதிராகச் செயற்படும் எங்களுடன் கைகோர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
'இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளின் காலக்குறைப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்    
சுகாதார பிரிவையும் சுதந்திரமான சுகாதார சேவையையும் பாதுகாப்போம்'

           

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா