இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/27/2013

சம்மாந்துறையில் இடம்பெற உள்ள சர்வதேச சிறுவர் தின விழா


து ஒழியட்டும் சிறுவர் வாழ்வு மலரட்டும் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின விழா இம்முறை சம்மாந்துறையில்.

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறுவர் தின விழா சர்வதேச சிறுவர் தினமாகிய எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எம். முபாரக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ் உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க, ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் அம்பாரை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா