(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசத்தில் இன்று (09) மாலை அதிகளவான கருங்கண்னி வெண் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் நான்கு மாதகால இடைவெளிக்குப் பிறகு இவ்வாறு அதிகளவான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடைய கரைவலையிலிருந்து சாதரணமாக ஒரு கிலோ எடையுடைய சுமார் 1000 வரையான எண்ணிக்கையுடைய மீன்கள் பிடிக்கப்பட்டன.
கடற்கரைப்பிரதேசத்தில் ஒருமீன் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது
இருந்த போதிலும் மீனவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட இம் மீன்கள் ஒவ்வென்றும் வெளியில் 350ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment