இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/15/2013

ஆசிரியர் தின நிகழ்வுகள்


(ஆலிஸ்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் பல்வேறு தொடர் நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.

இனநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் பொத்துவில் பிரதேசத்தில் புராதன இடங்களைத் தரிசிப்பதற்கான சுற்றுலாவொன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆசிரிய--மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தின மறுநாள் ஆசிரிய--ஆசிரியர்கள் கலந்து கொண்ட 12 ஓவர் மென்பந்து போட்டியொன்று நடைபெற்றது.இதில் தில்றுக்சி அணி வெற்றி பெற்றது.

.இதளைத் தொடர்ந்து ஆசிரியை--மாணவிகளின் வேகமான சைக்கிள் ஓட்டம். ஆசிரியர்களின் மெதுவான மோட்டார் சைக்கிள் ஓட்டம் என்பன இடம்பெற்றன.அதிபர் அபீரா சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிவில்களை வழங்கி வைத்தார். 

ஆரம்ப பிரிவினரால் நடத்தப்பட்ட ஆசிரியா் தின நிகழ்வு பகுதித் தலைவர் எம். தௌபீக் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.பலுான் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் இதன்போது அரங்கேறின.

உயர்தர மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சகல சமய ஆசிரியர்களினதும் அனுஸ்டானம் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிறந்த அதிபருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அதிபர் திருமதி அபீரா சலீம் பாடசலை சமூகத்தால் இதன்போது பாராட்டப்பட்டார்.

ஆசிரியர் தின சிறப்புரையினை ஜெஸ்ம் எம்.மூஸா ஆற்றியதுடன் ஆசிரிய--மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேறி பலராலும் பாராட்டப்பட்டன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா