இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/17/2013

ஹிஜ்ரா சந்தியில் அலங்கரிக்கப்பட்ட மின் குமிழ் அலங்காரப்பந்தலுக்கு சேதம் விளைவிப்பு


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறையில் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் ஹிஜ்ரா சந்தி மணிக்கூட்டுக் கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட மின் குமிழ் அலங்காரப்பந்தலுக்கு சேதம் விளைவிக்கப்படுட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது இன்று அதிகாலை வந்த இனம் தெரியாத நபர்கள் மின்குமிழ் பந்தலுக்கு சேதம் விளைவித்ததாகவும் அதனை தடுக்கச் சென்ற காவலாளியையும் தாக்கியதாகவும் அறிய முடிகின்றது.

மேலும் தாக்கப்பட்ட காவலாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது தொடர்பான மேலதீக விசாரனை சம்மாந்துறை பொலிஸாரால் கொள்ளப்பட்டு வருகின்றது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா