இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/19/2013

கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சை


கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

ஆண்களுக்கேயான பிரத்தியேக  மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது  டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். 

பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்கு கோப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆண்கள் புஷ் அப் மார்பு கச்சையை அணியும்போது அது ஆண்களின் நெஞ்சை அது நிமிர்த்திக்காட்டுவதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான்கானின் உடல்வாகு இல்லாத ஆண்கள் இந்த பிராவை அணிந்தால் அவர்களது உடல்தோற்றம் எடுப்பாக காணப்படும் என பெஷன் வடிவமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

 'எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப்பிரசாதம்தான். ஒருப்பக்கம் இது நகைச்சுவையாக  இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து' என  பொலிவுட் நடிகரான இஜாஸ் கான்   என்றார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா