இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/20/2013

நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 6 நபார்களுக்கு பிணை : 15 நபார்களுக்கு விளக்கமறியல் Photos

(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்ற பதட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 21 சந்தேக நபார்கள் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமண்றில் அஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி கே.கருணாகரன் தலைமையில் இடம் பெற்ற இவ்விசாரனையில் அஜர் படுத்தப்பட்ட 21 சந்தேக நபர்களில் 06 நபர்களுக்கு 50.000 ரூபாய் பெறுமதியான சரிரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்கள் 18 வயதுக்குக்குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய 15 சந்தேக நபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் வாதிட சட்டத்தரணி எம்.முஸ்தபா, சறுக் காரியப்பர், ஏ.எம்.நசீல்,ஏ.எம்.றகீப் அகியோருடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களும் சட்டத்தரனி சீருடையில் பிரசன்னமாகி இருந்தார்.

மேலதிக செய்தி
(ஹனீபா)
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் பொலிஸாரினால் நேற்று (19)கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை இன்று புதன் கிழமை சம்மாந்துறை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் கே.கருணாகரன் 07 பேரை தலா ரூபா 50,000 சரீரப்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 21 பேரில் 14 பேரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 06பேர் 18வயதுக்கு குறைந்தவர்களும் மற்றய நபர் சித்தசுவாதீனம் அற்றவராகும்.

நேற்று செவ்வாயக்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் 02ஆவது நாளாகவும் வீதித்தடைகள் போட்டு ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த வேளையில் பொலிஸாரினால் 21பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹர்த்தாலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அம்பாறை மாவட்டத்தின்  பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து வீதித்தடைகளையும் அகற்றியிருந்தனர்.

இதனை அடுத்து பொலிஸாரை தாக்க முட்பட்டார்கள் என 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் 07 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 20 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பபற்றப்பட்டு பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வந்ததுடன் அவர்களின் கைவிரல் அடையாளமும் பெறப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுமாறும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா