இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/20/2013

தெ.கி.பல்கலை பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கை ஆரம்பம்


மோதல் காரணமாக காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவ குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 53 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆரம்பிக்கபட்டுள்ள கல்வி நடவடிக்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
விசாரணை முடிவுறும் வரை இவர்களுக்கான தடை அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா