இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/27/2013

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு மஹா விஷ;னு வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) மாலை வித்தியாலய மண்டபத்தில் தலைவர் லயன்  எஸ்.சிறிரங்கன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் ஆண்டு -01 தொடக்கம் ஆண்டு -05 வரைக்குமான 136 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் இவ்வாண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர் ஒருவருக்கம் ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் 306 சீ2 மாவட்டத்தின் 2வது உதவி ஆளுணர் லயன் விக்கும் பிரிய வீரக்கொடி-எம்.ஜே.எப், மாவட்ட ஆளுணரின் விஷேட நிகழ்சித் திட்ட அணைப்பாளர் லயன் அசேல, வலயத் தலைவர் லயன் கே.பொன்னம்பலம், கழக செயலாளர் லயன் ஏ.ஜே.எம்.ஹனீபா, பாடசாலை அதிபர் எஸ்.கொவிந்த ராஜா,கழக பொருளாளர் லயன் பிஜே.பத்திரன உட்பட பலர் கலந்து கொண்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா