இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/22/2013

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.ஏ.ஜலீல் பொறுப்பேற்றுக் கொண்டார் Photos


(ஹனீபா)
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.ஜலீல் இன்று வெள்ளிக் கிழமை (22) மாலை 4.05மணிக்கு தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர் கிழக்குமாகாண கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.ஜலீல் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் உரையாற்றுகையில் நான் எந்தவொறு எதிபார்புக்களும் அற்றவனாக இந்தப் பிரதேச மாணவர்களின் கல்விக்கு பணியாற்றும் நோக்குடன் இற்றைக்கு ஒருவருடங்களுக்கு முன்னர் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்கு ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என்மீது ஒரு பாரிய பணி ஒப்படைக்கப்படுகின்றது.

இந்தப் பணியினை நான் ஒரு அமானிதமாக பொறுப் பேற்றுக் கொள்வதுடன் இந்தப் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உயர்ச்சிக்கும் என்னால் இயன்ற வரையில் பணியாற்றவுள்ளேன் நான் இந்தப் பிரதேசத்தையும் இப்பிரதேச ஆசிரியர்கள் ஆதிபர்கள் அனைவரையும் நன்கு அறிந்தவன் என்னுடன் இணைந்து பணியாற்றக் கூடிய நல்ல காரியாலய உத்தியோகத்தர்களும், அதிபர்களும் இங்கு உள்ளனர்.

நான் 8 வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கீழ் கடமையாற்றியுள்ளேன் கல்விப் பணி என்பது ஒருவரினால் மேற் கொள்ளக் கூடிய ஒரு விடயமல்ல அது ஒரு கூட்டு முயற்சியாகும் அந்த வகையிலேதான் அதிபர்கள் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் எமது கல்வி வலயம் ஒரு மன்மாதிரியான வலயமாக திகழ செய்ய எனக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இங்கு கடமையாற்றி மாகாண கல்வியமைச்சுக்கு இடமாற்றம் பொற்றுள்ள எம்.கே.எம்.மன்சூர் அவர்களும் இந்த வலயத்தின் வளர்ச்சிக்கும் உயர்சிக்கும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளார் அவர் ஆற்றிய சேவையை பின்னடையச் செய்யாது மேலும் இப்பிரதேச மாணவர்களின் கல்வியை மேலோங்கச் செய்ய திட்டமிட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன், எஸ்.எல்.ஏ.றஹீம், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீர் உட்பட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், காரியாலய ஊழியர்கள் பலரும் கலந்த கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா