இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/31/2013

கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று வெற்றி பெற்றது

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று (31.12.2013) செவ்வாய்க்கிழமை வெற்றிபெற்றுள்ளது.

மேற்படி வரவு செலவுத்திட்டம் 2013.12.23ஆம் திகதி திங்கள்கிழமை தேற்கடிக்கப்படவிருந்த நிலையில் பிற்போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பு உறுப்புனர்களை கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (30.12.2013) மாலை 06.00 மணியளவில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.

இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்கழிக்கழிப்பதற்கு முஸ்தீவு செய்த ஆழும் கட்சி உறுப்பினர்களது நியாயங்களை தனித்தனியாக கட்சித் தலைவர் விசாரித்தார்.

இதன்போது முன்னாள் முதல்வர் சிராஸினால் நியமனம் பெற்று தற்போதைய முதல்வர் நிசாம் காரியப்பரினால் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்ளல், பீச் பார்க் கட்டுமானப் பணிகளை பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் மீண்டும் ஆரம்பித்தல், சாய்ந்தமருதுக்கான அபிவிருத்தி பணிகளை பிரதி முதல்வர் தலைமையில் மாநகர உறுப்பினர்களின் அனுசரணையில் செயற்படுத்தல், பிரதி முதல்வருக்கான சகல  அலுவலக வசதிகளையும் செய்துகொடுத்தல் போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டது. அத்தோடு முதல்முறை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்துவிட்டு இரண்டாம் முறை வெல்லவைப்பதாகவும் தெரிவித்தனர்.

மேற் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கான சகல பொறுப்புக்களையும் தான்  பாரமெடுப்பதாகவும் ஏதும் குறைகள் ஏற்படின் அவை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவருமாறும், ஏற்கனவே சென்ற 23ஆம் திகதி நீங்கள் வரவு செலவுத் திட்டத்தை தோக்கடித்து விட்டீர்கள் எனவே தற்போது தலைமையின் கட்டளைக்கு பணிந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திகழும் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கிணங்க  மேற்குறித்த 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். எதிர்க் கட்சியினைச் சேர்ந்த பொதுஜன ஐக்கிய முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் நான்கு பேரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் பகிஸ்கரித்து வெளி நடப்பு செய்தனர். ​

இவ்வரவு செலவுத்திட்டத்தின் மொத்த வருமானமாக 172 மில்லியன் ரூபாவும் மொத்த செலவீனமாக 169 மில்லியன் ரூபாவும் காணப்படுகிறது.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா