இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/03/2013

கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் ரத்து!

(ஹனீபா)

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதலவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பணிப்புரையை அவர் இன்று திங்கட்கிழமை (2) மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிக்கு விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் தற்போது விடுமுறையில் நிற்கும் சுகாதாரத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரை எவரும் விடுமுறை பெற முடியாது எனவும் முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்த்துள்ளார்.

அதேவளை இந்த ஊழியர்களின் உயர்ந்த சேவையை மதித்து அவர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்கும் 
முதல்வர் நிசாம் காரியப்பர் தீர்மாந்த்துள்ளார்.

இந்த அவசரகால நிலைமையில் விடுமுறை பெறாமல் பணிக்கு சமூகமளிக்கும் குறித்த தற்காலிக ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவதற்கும் அவர்களுக்கு தொடர்ச்சியான தொழில் உத்தரவாதத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்ற தற்காலிக ஊழியர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்குப் பின்னரும் சேவை நீடிப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடை மழை பெய்து வருவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த அனர்த்தத்தில் இருந்து இப்பிரதேசங்களையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டே சுகாதாரத் தொழிலாளர்களுக்கு இத்தகைய சலுகைகளை வழங்கி  விடுமுறைகளை ரத்துச் செய்வதற்கு தீர்மானம் மேற்கொண்டதாக முதலவர் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் உடனடியாக கடமைக்குத் திரும்பி வடிகான் துப்பரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா