இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/01/2013

திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் மூலம் மின் உற்பத்தி : உதவியது இந்திய

(ஹனீபா)
திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கான கல்முனை மாநகர சபையின் உத்தேச திட்டத்திற்கு உதவி வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (29) மாலை இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட சுமார் 250 மில்லியன் பெறுமதியான திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவ வேலைத் திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி திட்டத்திற்கு இந்தியா உதவி வழங்கும் என்று இந்திய துணை உயர்ஸ்தானிகர் குமரன் உறுதியளித்தார்.

அத்துடன் கல்முனை நூலக அபிவிருத்தி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களுக்கும் உதவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

இதன்போது இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரினால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதேவேளை இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவகத்தின் ஊடாக (முஐடுயு) கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு இந்திய துணை உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான  ஏ.எம்.ஜெமீல்இ கல்முனை மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர்களான ஏ.எம். பரக்கத்துல்லாஹ்இ ஏ.எல்.எம்.முஸ்தபாஇ ஏ.ஏ.பஷீர்இ எம்.எல்.சாலிதீன்இ தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஏ.அமிர்தலிங்கம்இ ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் ஏ.எம். ரியாஸ்இ ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் சர்வதேச தொடர்பாடல் அதிகாரி  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா