இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/23/2014

கௌரவிப்பு விழா

(ஹனீபா)
மறைந்த பிரபல வானொலி, தொலைக்காட்சி கலைஞர் சக்காப் சற்.மௌலானா அவர்களின்13 ஆவது ஆண்டு நீனைவை முன்னிட்டு மருதம் கலைக்கூடல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் சாய்ந்தமருது அல்ஹிலால்வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிரேஷ்ட ஒலிபரப்பாளர்- அதிபர்மணி ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், சாய்ந்தமருதுபிரதேச செயலக நிர்வாக உத்தியோத்தர் எம்.ஐ.உதுமாலெப்பை,கலாசாரஉத்தியோகத்தர்எம்.ஐ.எம்.அஷ்ரப்,கலாபூஷணம் முஹம்மட் அபூபக்கர் ஆகியோர்பொன்னாடை போர்த்தப்பட்டு- விருதுகள் வழங்கி- பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம்.பிரதௌஸ் அவர்கள்இ கலைஞர் சக்காப் சற்.மௌலானா அவர்களின் கலை, இலக்கிய வரலாற்று நினைவுத் தொகுப்புரையை நிகழ்த்தினார்.

அத்துடன் இலங்கை வானொலி தேசிய சேவை அறிவிப்பாளர் கவிஞர் எஸ்.ஜனூஸ், மருதம் கலைக்கூடல் மன்றத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எம்.ஐ.இஸ்ஸதீன்,செயலாளர் எம்.எஸ்.ஜௌபர், பொருளாளர் எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஈழத்து ஈ.எம்.நாகூர் ஹனிபா எனும் மருதமுனை கமால் அவர்களின் இஸ்லாமிய கீதங்களும் அரங்கேறின.

அதேவேளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அதிபர்மணி ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கு இதன்போது விசேட கௌரவம் அளிக்கப்பட்டது.

அங்கு தலைமையுரை நிகழ்த்திய மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் மௌலானா 'சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் மங்கி மறைந்து போயுள்ள கலைஇ இலக்கிய, சமூக சேவையாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் சேவைகளையும் சமூகஇ கலைஇ இலக்கிய பணிகளையும் முன்னெடுக்கும் நோக்குடனேயே மர்ஹூம் கலைச்சுடர் சக்காப் மௌலானா அவர்களின் கலைக்கூடல் மன்றத்திற்கு இந்த மண்ணில் மீண்டும் புத்துயிர் அளிக்கப்படுகிறது' என்று
குறிப்பிட்டார்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட ஒலிபரப்பாளர்- அதிபர்மணி
ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தனது சிறப்புரையில் 'இவ்வாறான கௌரவிப்பு விழாக்கள் மருதமுனை மண்ணில் அதிகம் இடம்பெற்று வருகின்றன. சாய்ந்தமருதிலும் இன்று தொடக்கி வைக்கப்படுகிறது. ஆனால் கல்முனைக்குடி மண்ணில் இப்படியொரு விழாவை காண முடியவில்லை. எவ்வாறாயினும் இது போன்ற கௌரவிப்பு விழாக்களை கல்முனை மாநகர சபை முன்னின்று செய்ய முன்வர வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம்.பிரதௌஸ் உரையாற்றுகையில்'கலைக்கூடலின் பிதா மகன் சக்காப் சற்.மௌலானா அவர்கள் அந்த அமைப்பின் மூலம் மருதமுனைஇ சாய்ந்தமருது பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் முழுக் கிழக்கு மாகாணத்திலும் அதற்கு வெளியே பொலன்னறுவை, புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் மேடை நாடகக் கலையை அறிமுகப்படுத்தி- அதனை வியாபிக்கச் செய்த ஒரு பல்துறைக் கலைஞராகத் திகழ்ந்தார்.

அரபு மற்றும் ஆங்கில வரலாற்று நிகழ்வுகளை தனது கலை மற்றும் மொழிப்
புலமையினால் தமிழில் வடிவமைத்து- எழுதி, தயாரித்து, அரங்கேற்றுவதில்
அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.

கிழக்கு மாகாணத்தில் இப்படி மேடை நாடகங்களை அரங்கேற்றுவதில் இது வரை காலமும் அவருக்கு நிகராக எவரும் இருந்ததில்லை என்றே கூறலாம்.

இது தவிர வானொலி, தொலைக்காட்சி கலைஞராக சக்காப் சற்.மௌலானா அவர்கள் இருந்த காலத்தில் அவரது நிகழ்ச்சிகளை கேட்பதற்கும் பார்ப்ப்த்து
ரசிப்பதற்கும் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அருகில் நாம்
எல்லோரும் தவம் கிடந்து காத்திருப்போம். அந்தளவுக்கு அவர்களது நிகழ்ச்சிகள் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ரசனையாகவும்
அமைந்திருக்கும்.

இவ்வாறு கலைத்துறையில் பிரகாசித்த சக்காப் சற்.மௌலானா அவர்களின்
பாசறையில் வளர்ந்த என் போன்ற ஒரு பட்டாளம் பேர் இன்று நாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் பரந்து ஒளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

எமது ஆசான் சக்காப் சற்.மௌலானா அவர்கள் கலைக்கூடல் மன்றத்தை கலை,. இலக்கிய பணிகளுக்கு மாத்திரமல்லாமல் சமூக சேவைகளிலும் ஈடுபடுத்தியதுடன் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியிலான பங்களிப்பையும் நிறைய பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பது அவரது மற்றொரு சிறப்பம்சமாகும்.

அவர்களது அத்தகைய பணிகளை முன்னெடுப்பதற்காக இன்றைய கெடுபிடியான வாழ்வியலுக்கு மத்தியில் மீண்டும் கலைக்கூடளுக்கு புத்துயிர்
அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும்' என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ.ஏ.ஜப்பார்,எம்.ஐ.எம்.முசம்மில், அதிபர் ஏ.வி.முஜீன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.எல்.எம்.றிசான்இ சாய்ந்தமருது சிங்கர் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர்
எஸ்.எம்.ஜிப்ரி, கலைக்கூடல் ஸ்தாபக உறுப்பினர்களான அப்துல் முனாப்,
எம்.எம்.அஷ்ரப் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலை, இலக்கியவாதிகளும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
பிறை எப்.எம். வானொலி அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.











0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா