இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/23/2014

தென் மாகாண ஆசிரியர் நியமனத்தின் போது முஸ்லிம்கள் புறக்கணிப்பு: தேசிய ஷூறா சபை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையீடு


 SLMA Secretariat


2013.12.26 ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமன நிகழ்வின் போது தென் மாகாணத்தின் தகுதிபெற்ற பட்டதாரி விண்ணப்பதாரிகளைப் புறக்கணித்து விட்டு மாகாணத்துக்கு வெயியே குறிப்பாக யாழ்ப்பானப் பல்கலைக்கழக உதவியுடன் வரவழைக்கப்பட்ட 67 பட்டதாரிகளை தென் மாணகாணப் பாடசாலைகளுக்கு நியமித்ததை தேசிய  ஷூறா சபை வன்மையாகக் கண்டிப்பதுடன்இ அதற்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளது. 


குறித்த நியமனத்தால் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரி விண்ணப்பதாரிகளுடன் கலந்தாலோசித்துத் தயாரித்த தேசிய ஷூறா சபையின் அறிக்கையின் பரிந்துரைகளின் படி நேற்றும் இன்றும் பாதிக்கப் பட்ட பட்டதாரிகள்  குழுக்களாகவும்இ தனியாகவும் மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறையீடு செய்துள்ளனர்.



தென் மாகாண கல்வி அமைச்சின் வர்தமானி அறிவித்தலின்(2013.08.16) படி பிரதேச முஸ்லிம்கள் இன ஒதுக்களுக்கு உட்பட்படுத்தப் பட்டுள்ளதை பாரிய மனித உரிமை மீறலாகச் சுட்டிக் காட்டி குறித்த வர்தமானி அறிவித்தலின் படி வழங்கப்பட்ட 67 நியமனங்களையும் உடனடியான இரத்தச் செய்வதுடன்இ 2012.08.28 ஆம் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்ப தாரிகளுக்கும் உடனடியாக நியமனம் வழங்க ஏற்பாடு செய்யுமாறும்இ குறித்த திட்டமிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டி தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் கொழும்பு பெரிய பள்ளி பேஷ் இமாம் மெளலவி தஸ்லிம் தலைமையிலான குழு இன்று மனித உரிமை ஆணைக் குழுவிடம் மனு தாக்கல் செய்தது.


குறித்த குழுவில் தேசிய ஷூறா சபையின் உறுப்பினர்களான ஆ.சு.ஆ. நஜாஇ யு.டு. ஹகீம்இ வைத்தியர் றியாஸ் காஸிம் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளும் கலந்து கொண்டனர். குறித்த முறைப்பாட்டில் தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரியஇ தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் தென் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப் பட்டிருந்தனர்.

தென் மாகாண முஸ்லிம் பட்டாதாரிகளுக்கு இழைக்கப்பட்ட்ட அநீதியை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும்இ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் தேசிய ஷூறா சபை முன்னெடுத்து வருகின்றது.

சுமார் 80இ000 முஸ்லிம்கள் வாழும் தென் மாகாணத்தில்இ மாகாண சபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சந்தர்ப்பத்தில் தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர அவர்களின் முஸ்லிம்களுக்கெதிரான வரம்புமீறிய செயற்பாடு நேர் மறையான விளைவுகளை  எற்படுத்தலாம் என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


முழுமையான முறைப்பாடு:

தென் மாகாண சிங்கள மற்றும் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடம் தொடர்பாக 2012.08.28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன் படி பொதுவான போட்டிப் பரீட்சையும் தகுதிகாண் நேர்முகப் பரீட்சையும் முறையே 2012.11.17 மற்றும் 2012.12.08 எனும் திகதிகளில் நடைபெற்றன.



இதன் படி நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் பரீட்சாத்திகள் விண்ணப்பித்து உரிய தகைமை பெற்றிருந்தனர். இருப்பினும் 2013ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் சுமார் 1இ200 சிங்கள ஆசிரியர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டனர். ஆனால் எவ்வித காரணங்களும் இன்றி தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவில்லை. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் இனத்தை அல்லது மதத்தை அடிப்படையாக்க் கொண்டு இந்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டு தென் மாகாணத்திற்கு வெளியே இருந்து தமிழ் இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டு அவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கான முயற்சிகள் தென் மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டது.



நடைமுறைக்குப் புறம்பான வகையில் தமிழ் விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களைத் திரட்டிய தென்மாகாண கல்வி அமைச்சு பேரளவிலான ஒரு விளம்பரத்தை 2013.08.16ஆம் திகதி பிரசுரித்தது.



இந்த முறை கேடான இரண்டாம் விண்ணப்பத்தின் படி தமிழ் மொழி மூலம் பாடசாலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து சமயம்இ சைவநெறி அல்லது கிரிஸ்தவ சமயத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்பட்டிருந்த்து முஸ்லிம்களை  இன ரீதியாக ஓரங்கட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்பது வெளிப்படையானது.



ஒரு வருடங்களுக்கு மேல் விண்ணப்பித்து நியமனம் பெறும் தகுதியைப் பெற்ற முஸ்லிம் விண்ணப்பதாரிகள் அப்படியே இருக்க முறை கேடான முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழின பட்டதாரிகளுக்கான நியமனம் மிகக்குறுகிய காலப்பகுதியில் அதவது 2013.12.26 ஆம் திகதி வழங்கப்பட்டன. இது முஸ்லிம்கள் இன ரீதியாக புறக்கணிக்கப்பட்டதற்கான மற்றொரு சான்றாகும்.



முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல் நடவடிக்கையை மூடி மறைக்கஇ குறித்த நியமனத் திகதியன்று முஸ்லிம் விண்ணப்பதாரிகளில் ஒரு சிலருக்கு இரவோடு இரவாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.



இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம் விண்ணப்பதாரிகள் (சுமார் 60 பேர்) இன்றுவரை எந்தவொரு நியமனமும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.



தென் மாகாண கல்வி அமைச்சு பின்வரும் சில வினாக்களுக்கு பதில் கூறுமாக இருந்தால்:

தென் மாகாணத்தில் தகுதியான பல விண்ணப்பதாரிகள் ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெறாது புறக்கணிக்கப்பட்டுள்ள அதே வேலை வெளி மாகாணங்களில் இருந்து ஆட்சேர்ப்பாதற்கான இரண்டாவது விண்ணப்பம் ஏன் கோரப்பட்டது?

குறித்த இரண்டாம் விண்ணப்பம் தமிழ் இந்துக்கள் அல்லது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் ஏன் மட்டுப்படுத்தப்பட்டது?

2012ஆம் ஆண்டு விண்ணப்பித்த தனது மாகாண பட்டதாரிகள் தொழில்வாய்ப் பற்றுக்கிடக்கும் அதே வேளை இரகசியமான முறையில் யாழ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?

பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் கணிதம்இ விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த அல்லது சிங்கள மொழியில் கற்ற ஆசிரியர்களை நியமித்த தென் மாகாண கல்வி அமைச்சு தமிழ் மொழி மூல தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் கற்பிக்க தென்மாகாணத்தைச் சேரந்த தமிழ் மொழி மூலம் கற்றுத் தகுதிபெற்ற முஸ்லிம் விண்ணப்பதாரிகள் நியமிக்கப்படுவதை நிராகரித்ததில் உள்ள நியாயம் என்ன? ​

​சிங்கள மொழியுடன் சேர்த்து தமிழ் மொழி மூலமான பரீட்சைப் பெறுபேறுகளை கலந்து சிக்கலான முறையில் கணிப்பீடு செய்து தரவரிசைப் படுத்தி 2012 ஆம் ஆண்டு விண்ணப்பித்த தமிழ் மெழி மூலம் பரிட்சாத்திகளை கீழிரக்கம் செய்ய எடுத்த முயற்சியின் மர்மம் என்ன?

எனும் கேள்விகளுக்கான எளிய பதில் தென்மாகாண சபையும்இ  தென்மாகாண கல்வி அமைச்சும் முஸ்லிம் ஆசிரியர் நியமனத்தை நிராகரிப்பதுடன்இ தோட்டப் பகுதி தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான முஸ்லிம் ஆசிரியர் நியமனத்தை முழுமையாகத் தடைசெய்துள்ளது என்பதாகும். அதே போல தென் மாகாண சபை பிரதேச முஸ்லிம்இ தமிழ் மற்றும் சிங்கள உறவை சீர் குழைப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றதா? என்ற அச்ச உணர்வும் பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா