இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2014

திவிநெகும வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

(ஹனீபா)
'திவிநெகும' வாழ்வின் எழுச்சி திணைக்களம்  இன்று (03) காலை 10 மணிக்கு தினைக்களமாக மாற்றுவதற்கான வர்த்தமாணியில் உத்தியோக பூர்வாமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்பஸீல் ராஜபக்ஷ அவர்களினால் கையொப்பமிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இத்தினத்தில் நாடுபூராகவுமுள்ள மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்கிளலும் சமுர்த்தி மகாசங்கம் மற்றும் சமுர்த்தி வங்கிகளிலும் பல்வேறு மதவழிபாடுகளுடனான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன அத்துடன் கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் இத்திட்டடம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திலும் சமய வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், சர்வமதத்தலைவர்கள், மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஷட்.ஏ.றஹ்மான், மாவட்ட சமுர்த்தி வங்கி மகாசங்க மேற்பார்வை உத்தியோகத்தர் ஜே.எம்.ஹனீபா, சமுர்த்தி முகாமையாளர்களானஏ.ஜினேந்திரன்,எஸ்.எல்.எம்.மசூர்,ஏ.எல்.ஏ.ஹமீட்,ஐ.எல்.ஹிதாயா,எம்.ஐ.எம்.ஆசாத் உட்பட சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் எ.மன்சூர் கருத்து தெரிவிக்கையில் 'திவிநெகும' வாழ்வின் எழுச்சி திணைக்களம் உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் 18 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 இலட்சம் பேரின் வாழ்கையினை மேம்படுத்தும் ஒரு உன்னதமான இத்திணைக்களமாக இத்திணைக்களம் செயற்படவுள்ளதாகவும் இரண்டு திணைக்களம் மற்றும் மூன்று அதிகார சபை என்பவற்றை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுகின்ற இத் 'திவிநெகும' வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஊடாக அங்கு கடமையாற்றும் 27 ஆயிரம் உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வுதியம் பெற்றுக் கொள்வதுடன் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெற்றுக் கொள்ளும் சகல வசதிகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளீர்கள் ஆனால் கடந்த காலங்களில் செயற்பட்ட அதிகாரசபை சட்ட செயற்பாட்டுக்கு மாற்றமாக தங்களது செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

இன்றிலிருந்த நீங்கள் அனைவரும் நிதிப்பிரமானம் மற்றும் தாபன விதிக்கோவைகளுக்கு அமைவாக தங்களது பணிகள் மெற்கொள்ளப் படவேண்டம்; எனவும் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா