இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/23/2014

கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

-ஹனீபா
கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர்
எம்.சி.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள  சுகாதாரப் பகுதி
அலுவலகத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று புதன்கிழமை (22) இவர் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர்இ எம்.எஸ்.உமர் அலி,
ஏ.எல்.எம்.முஸ்தபாஇ மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிஇ முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான  பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்குஇ முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக  முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் எம்.சி.எம்.மாஹிர்இ இதற்கு முன்னர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா