இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/16/2014

மேசன் தொழிலாளர் சங்கத்தின் 9வது ஆண்டு பூர்த்திவிழா

(ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேசன் தொழிலாளர் சங்கத்தின் 9வது ஆண்டு பூர்த்திவிழா நேற்று (15) மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் பள்ளிவாசலில் மோசன் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஹசன் தலைமையில் நடைபெற்றது.

கிரஷன் கொ நிறுவனத்தின் அதாவது டிவான் சீமெந்து நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர்; எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கணக்காளர் ஏ.எல.மஹ்றூப், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஷ;வி, கிரஷன் கொ நிறுவனத்தின் அதாவது டிவான் சீமெந்து நிறுவனத்தின உரிமையாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, சம்மாந்துறை உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல்காதர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, உட்பட தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், ஹாட்வெயர் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊர் பிரமுகர்கள் மோசன் தொழிலாளர்கள் என பலர் கலந்த கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர்; எம்.ஐ.எம்.மன்சூர் உரையாற்றுகையில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் பலம்மிக்க ஒரு சக்தியாக இயங்கி வருகின்ற அமைப்பாக நான் இந்த அமைப்பை பார்க்கின்றேன் ஒரு சமூகத்தின் முக்கிய பாத்திரமாக செயற்பட்டு வருகின்ற இவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்று சேர்ந்து ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ளதையிட்ட நினைக்கின்ற போது நான் இவர்களை பாராட்டுகின்றேன்.

இந்த 9வது ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்னர் பல வருடாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவன் அந்தக் கூட்டங்கள் சாதரணமாக நடைபெற்று வந்தமை நான் அறிவேன் அதற்கு மேலதிகமாக இந்தக் ஆண்டுக் கூட்டம் பாரிய அமர்க்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை இவர்களின் வளர்ச்சிப்போக்கை எடுத்துக் காட்டுகின்றது அதே போன்று இந்தக் கூட்டத்திலே நான் ஒரு அமைச்சராக கலந்த கொள்கின்றேன் அதற்கும் இந்த அமைப்பின் உறப்பினர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியள்ளார்கள் அதற்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.

இந்த அமைப்பின் உறப்பினர்கள் ஒருகடினமான தொழிலை பணியினை செய்து அதன் மூலம் பெறுகின்ற வருமானத்தில் ஒரு தொகையினை தங்களது அமைப்பின் மூலம் ஒன்று சேர்த்து இப்பிரதேசத்திலுள்ள வறிய பலம் குன்றிய மக்களுக்கு  சமூகப்பணிகளையும் சேவைகளையும் செய்த வருகின்றீர்கள் உண்மையில் இந்த விடயம் பாராட்டுக்குரியது எனவும் அமைச்சர் மன்சூர் தெரிவித்ததார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் மோசன் தொழிலாளர்களின் பணி என்பது ஒரு பிரதேசத்தின் ஒரு நகரத்தின் ஏன்; ஒருநாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிப்பவர்கள்  நிர்மானிப்பாளர்கள் அதாவது மேசன் தொழிலாளர்களாகும் அவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று இந்த ஏற்பாட்டுக்கு முழு அனுசரனையாளர்களாக கிரஷன் கொ நிறுவனத்தின் அதாவது டிவான் சீமெந்து நிறுவனமும் அதன் அதிபருமான பாயிஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட பாத்திரம் சரியான ஒரு முடிவாகும் அனேகமாக எமது பிரதேசங்களைப் பொறுத்;த வகையில் பெரும்பாலான மக்கள் மோசன் தொழிலாளர்கள் தீ;ர்மானிப்பதையே தீர்மானிக்கின்றனர் அந்த வகையில் சரியான முடிவு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வின் அனுசரனையாளர் மோசன்தொழிலாளர் அமைப்பின் தலைவர் மற்றும் உறப்பினர்கள் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கோண்டார்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா