இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/16/2014

25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர்பாசன அபிவிருத்தி திட்டம்

-ஹனீபா
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விசாய மக்களின் நன்மை கருதி நீர்பாசன அமைச்சின் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாவடிப்பள்ளி சின்னப்பாலத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட நீர்பாசன பொறியியலாளர் பிரிவுக்கான கீழ் குறுனல் கஞ்சி பிரிவுக்காரியாலய திறப்பு விழாவும் கரைவாகு வடிச்சல் திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்பண நிகழ்வும் இன்று (15) கல்முனைப் பிதேச நீர்பாசனப் பொறியியலாளர்  எம்.திலகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

கரைவாகு வடிச்சல் திட்டம் 2008ம் ஆண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன்  நியாப் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விவசாய அமைப்புக்கள் ஒன்றினைந்து பாராளுமன்ற உறுப்பினரிடம் இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நீரில் மிதந்து தோண்டும் கொபல்கோ இயந்திரத்தினையும்  அதற்கான நிதி உதவியினையும் பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டு கோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் நீர்பாசன அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம பொறியியலாளர் வை.அப்துல்; மஜீத் அவர்களின் உதவியுடன் கரைவாகு வடிச்சல் வேலைத்திட்டம் 2010ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள 5000க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாயிகளின் காணிகளை இரண்டு போகங்கள் செய்கை பண்ணக் கூடியதாக மாற்றப்பட்டதனால்; இப்பிராந்தியத்திலுள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் நன்மையடையவுள்ளனர்.

இத்திட்டத்தினை தொடர்சியாக கொண்டு செல்ல இந்த வருடம் திதுலன திகாமடுல்ல திட்டத்தின் கீழ் தேவையான நிதிகளை ஒதக்கீடு செய்யவுள்ளதுடன் இத்திட்டத்தினை மேற் கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்று வெற்றிகரமான முறையில் நிறைவு செய்து விவசாயிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நீர்பாசன அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் வை.அப்துல்; மஜீத், அம்பாறை மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்களான பொறியியலாளர் சோமா எஸ்.எல். வீரசிங்க, பொறியியலாளர் நிஹால் சிறிவர்தன, பிரதம பொறியியலாளர் என்.நாகரத்தினம், அக்கரைப்பற்று பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எம்.ஐ.சுஹைர் இப்றாஹீம் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா