இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/22/2014

கட்டாக்காலிகளின் இருப்பிடமாக மாறிவரும் சம்மாந்துறை பிரதான தபாலகம்.

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதான தபாலகமானது அம்பாறை மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட தபாலகமாக காணப்படுவதுடன் 09 உப தபாலகங்களை நிர்வகித்துவரும் ஒரு பிரதான தபாலகமாகும்.

இத் தபாலகமானது நீண்ட நாட்களாக எந்தவொரு அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதுடன் உடைந்த பிரதான நுழைவாயிலுடனும் ஜன்னல்களுடனும் காட்சியளிப்பதுடன் நீண்ட நாட்களாக நிறப்பூச்சும் பூசப்படாமல் காணப்படுகிறது.

மேலும் தபாலகத்தின் சுற்று வேலிகளும் சேதமடைந்து காணப்படுவதனால் கால்நடைகள் வந்து தங்குவதுடன் கழிவுகளையும் அங்கேயே அகற்றுகிறன. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா