இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/31/2014

தேசிய காங்கிரஸின் 10ஆவது பேராளர் மாநாடு


(ஹனீபா)
தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு இன்று (30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் மர்ஹூம் ஏ.பி.தாவூத் அரங்கில் நடைபெற்றது. இன்றைய பேராளர் மாநாட்டைசர்வமத பிராத்தனைகளுடன் சம்பிரதாய முறைப்படி கட்சியின் சிரேஷ;ட தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஏ.உதுமாலெப்பை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்;து அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நடப்பு வருடத்துக்கான கட்சியின் நிர்வாகிகளை போராளர்களுக்கு மத்தியில் பிரகடனப்படுத்தினார்.

அதன்பிரகாரம் தேசிய காங்கிரசின் கட்சியின் தேசிய மீ உயர் சபை உறுப்பினர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் அதன்படி கட்சியின் தேசிய தலைவராகவும் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ;ட உதவிச் செயலாளர் நாயகமாக டாக்டர் ஏ.உதுமாலெப்பை, பிரதிச் செயலாளர் நாயகமாக ஐ.ஏ.ஹமீட், உதவிச் செயலாளர் நாயகம் எம்.எச்.ஏ.சமட், தேசிய அமைப்பாளராக மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய பொருளாளர் ஏ.எம்.வொஸீர், தெசிய கொள்ளைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி அமீறுல் அன்சார் மௌலானா, தேசிய இளைஞர் அமைப்பாளராக ஏ.அஹமட் சக்கி, தேசிய பொதுசன தொடர்பு இணைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளராக பொறியியலாளர் எம்.எஸ்.நஸீர், செயலாளர் தொழில்சங்க விவகாரம் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தேசிய மகளிர் அமைப்பாளராக மல்லிகா பத்திரன, உறுப்பினர்களாக ஏ.எம்.பாரிஸ், சம்பத் மஹதா, மௌஜூத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் பிரதிச் தேசிய அமைப்பாளர் யூ.எல்.எம்.உவைஸ், பிரதி தேசிய இளைஞர் அமைப்பாளராக டாக்டர் வை.எஸ்.எம்.றியாஸ், பிரதி தெசிய பொருளாளராக ஏ.ஜே.ஜூனைட், மேலதிக கொள்கைபரப்புச் செயலாளராக சட்டத்தரணி பஹீஜ், உதவி கொள்கைபரப்புச் செயலாளராக திரு பாலித,  பிரதி தேசிய இணைப்பாளராக எஸ்.எம்.சபீஸ், செயலாளர் பொருளாதார விவகாரம் எ.எம்.சுபைர், செயலாளர் சட்ட விவகாரம் ஏ.எப்.எம்.றூபி, செயலாளர் கலாசார அலுவல்கள் யூ.எல்.எம்.அரபாத், செயலாளர் கல்வி நடவடிக்கைகள் ஏ.எல்.எம்.கையூ அதிபர்,  அதன் உறுப்பினர்கள் நூறுல் பௌஸ், ஷhஹிர் ஹூசைன், பதூர்கான், யூ.எம்.நிசார், எம்.ஏ.தம்பிக்கண்டு, எம்.ஐ.கியாவுதீன், சமூன், வாஹீட், சட்டத்தரணி சபறுல்லா ஆகியோருமபிரதி கொள்கைபரப்புச் செயலாளர்களாக ஹால்தீன் அமீர், மஜீட் (பாடகர்), பிரதி இணைப்பாளர் சர்வதெச விவகாரம் முஸம்மில், கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளராக கலாநிதி சிறாஸ் மீராஷஹிப்,  கிழக்கு மாகாண இணைப்பாளராக சுபைதீன், கிழக்க மாகாண பிரதிச் செயலாளராக எம்.ஏ.றாசீக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முஸம்மில்,  அம்பாறை மாவட்ட செயலாளராக ஹனிபா,  அம்பாறை மாவட்ட கொள்கைபரப்பச் செயலாளர் பாறுக், அம்பாறை மாவட்ட பிரதி பொருளாளராக றிஷம், அம்பாறை மாவட்ட பிரதி தலைவர்களாக உபைதுல்லா, சம்சுதீன் ஹாஜி, அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக நியாஸ், அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளராக பரீட் அவர்களும் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் சபையில் முன்வைக்கப்பட்டனர்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா