இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/31/2014

தொழில் பேட்டைக்கான நில ஒதுக்கீடு சம்பந்தமான கலந்துரையாடல்.

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சூழல் பாதுகாப்பை பேணும் வகையில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் ஆங்காங்கே காணப்படும் தொழில் பேட்டைகளை சன நெரிசல் அற்ற பகுதிக்கு இடமாற்றம் செய்தல் தொடர்பாகவும், அதற்கான நில ஒதுக்கீடு சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் 2014.03.27ம் திகதி இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் மர ஆலை, நெல் ஆலை, உழவு இயந்திரங்கள் பழுதுபார்க்கும் கராஜ் போன்ற இடங்;கள் சன நெரிசல் அற்ற இடத்தில் நிறுவுதல் சம்பந்தமாக ஆலை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் சலீம், நகர அபிவிருத்தி உத்தியோகத்தர்கள,; பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா