இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/10/2014

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலேயே இருந்து மரணிப்பேன்!

-எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஏ.எம்.சம்சுதீன்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலேயே இருந்து மரணிப்பேன்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கினால் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக செயற்பட தயாராய் உள்ளேன்!!.
எஸ்.நிஜாமுதீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால போராளியான தான் தனக்கு சில சில அநீதிகள் இழைக்கப்பட்ட சமயங்களில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தபோதும், தாங்கள் கஷ்ட்டப்பட்டு போராட்டங்களுக்கு முகம்கொடுத்து  ஊயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி மற்றும் உயிர்ப்பலிகள் கொடுத்து வளர்த்த கட்சியை விட்டு ஒதுங்க வில்லை என்றும், தங்களால் வளர்க்கப்பட்ட கட்சியை மானசீகமாக நேசிப்பதாகவும் அந்த அடிப்படையிலேயே மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சரும், அமைச்சர் ரிசாத் பதியுதீன்னுடைய ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.

எதிர்பாராதவிதமாக அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துகொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தான் முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு ஒன்றை சாய்ந்தமருது சீ பிறீஸ் ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் 2014-03-08 ம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீனின் இணைப்புச்செயலாளர் முஹம்மட் ஆஷிக் பதுர்தீன்னுடைய தலைமைத்துவத்துடன் ஆரம்பமான இவ்வூடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட  முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன், முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற சிலர் பாராளுமன்றத்தில்இ தலைவர்கள் என்ற பெயரில் முன் ஆசனங்களில் அமர்வதற்காக கட்சிகளை நடத்தி வருவதாகவும், இதில் சில கட்சிகளுக்கு சரியான முறையில் யாப்புகளோ கொள்கைகளோ இல்லை என்றும், அரசாங்கத்தில் இருக்கின்ற போதிலும் அவர்களால் அவர்கள் சார்ந்த கட்சிக்கு அவர்கள் விரும்புகின்ற சின்னத்தை தானும் பெற முடியாதுள்ளதாகவும்இ இப்படியானவர்களால் முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரட்சினைகளை எவ்வாறு பேச முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது அதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கையாண்ட முறை மிகவும் வரவேற்க தக்கது என்றும் இவ்வாறானதொரு சூழலை ஏனைய கட்சித்தலைவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கட்சியில் இணைந்து கொண்டது சம்மந்தமாக கருத்து தெரிவித்த போது, தான் எவ்வித நிபந்தனை அடிப்படையிலும் கட்சியில் இனைய வில்லை என்றும் தன்னால் வளர்க்கப்பட்ட கட்சியை இன்னும் பலப்படுத்தும் நோக்கிலேயே இணைந்து கொண்டதாக தெரிவித்தார். இன்றைய நிலையில் ஆளுக்கு ஒரு கட்சி என்ற நிலையில் முஸ்லிம்கள் பிரிந்து விடுவார்களானால் அதனால் எமது சமூகம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இவ்வாறானதொரு நிலை இப்போது ஏற்பட்டு வருவதாகவும்,இவ்வாறான நிலையைப் போக்க முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்ட கொள்கை அடிப்படையிலாவது ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம் காங்கிரசை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்த போதும் எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரசை மலினப்படுத்தும் எவ்விதமான செயட்பாடுகளிலும் தான் ஈடும்படவில்லை என்றும் தெருவித்தார்.

சர்வதேச ரீதியில் பரிட்சயமான நீங்கள் முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான ஒருவராக நியமிக்கப்படுவீர்களா என வினவிய போது தான் எந்த நிபந்தனை அடிப்படையிலும் கட்சியில் இணைந்து கொள்ள வில்லை என்றும்இ ஆரம்ப காலத்தில் இருந்து தான் கட்சியின் உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் என பல நிலைகளில் இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாகவும் கட்சி எவ்வாறான பதவிகளை தந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் பிரதேச அரசியலில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட உள்ளீர்கள் என வினவிய போது தலைவரின் பணிப்பின் பெயரில் தேசிய மட்ட செயற்பாடுகளில் ஏற்கனவே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும், உள்ளுர் அரசியல் விடையத்தில் இங்குள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி செயட்படவுள்ளதாகவும் தான் யாருடைய பதவிகளையோ அல்லது செல்வாக்கையோ பறித்தோ அல்லது பங்கு போடவோ வரவில்லை என்றும் அவர்களுடன் இணைந்து கட்சியின் அபிவிருத்திக்கு பாடுபடவுள்ளதாகவும். தங்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்து மரணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் பதவியில் இருந்த உங்களை பின்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியும் முஸ்லிம் காங்கிரசில் இணையவுள்ளதாக பேசப்படுகிறதே என வினவிய போது அவரும் முஸ்லிம் காங்கிரசில் இருந்தவர் முஸ்லிம் காங்கிரசையும் அவர் தற்போது இருக்கின்ற கட்சியையும் ஒப்பிட்டு பார்த்திருப்பார் அதன் காரணமாக அவரது தெரிவு முஸ்லிம் காங்கிரசாக இருக்கலாம் ஏன் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா