இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/08/2014

'கல்விச் சமூகம் எதிபார்ப்பும் வகிபங்கும்' எனும் நூல் வெளியிட்டுவிழா

(ஹனீபா)
இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளருமான ஏ.எல்.நௌபில் எழுதிய 'கல்விச் சமூகம் எதிபார்ப்பும் வகிபங்கும்' எனும் நூல் வெளியிட்டுவிழா அண்மையில் (28) இறக்காமம்; பிரதேச சபை அரங்கில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மௌலவி யூ.கே.ஜபீர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் அதிதிகளாக பீகாஸ் கெம்பஸ் தலைவர்; பொறியியலாளர் எம்.எம்.அப்துல்றஹ்மான், அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் பணிப்பாளர் ஆய்வாளர் ரவூப் ஸெயின், ஜப்பானிய அரச கல்வித்துறை உறுப்பினரும் உயர்தர விNஷட கல்வித்துறை நிபுணருமான சத்தோசி கிக்குடா, ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியரும் சிரேஷ;ட ஊடகவியலாளருமான ரீ.மதுசூதனன், சிரேஷ;ட அறிவிப்பாளர் ஏ.எல்.ஜபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை  ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியரும் சிரேஷ;ட ஊடகவியலாளருமான ரீ.மதுசூதனன் நிகழ்தினார்.

நூலாசிரியர் ஏ.எல்.நௌபில் அவர்களால் நூல்கள் அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் அதிதிகளால் ஏனையோருக்கு நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா