இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2014

மனவெழிச்சிகளை புரிந்து கொள்ளுவதன் மூலம் மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள முடியும் : ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்(எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கண்கள் இருந்தும் தீயவற்றைப் பார்ப்பதை தவிர்த்தும், காதுகள் இருந்ததும் கூடாதவற்றைக் கேற்பதிலிருந்தும், வாய்களினால் மற்றவர்களை குறைகூறுவதிலிருந்தும், பொய்பேசுவதிலிருந்தும் விசேட தேவையுடைய பிள்ளைகள் இறைவனினால் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

ஹியுமன் லின்க் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்பூட்டல் நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் இன்று கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஹியுமன் லின்க் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.காமர்டீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ரயீஸ் தலைமை வகித்த  அதே வேளை கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் விசேட அதிதியாக கலந்து கொண்டார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், மனவெழிச்சிகளை புரிந்து கொள்ளுவதன் மூலம் மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள முடியும் என்றும், இன்றைய போராட்ட வாழ்க்கையை கொண்டு செல்வதில் மனிதன் பல கஸ்டங்களை எதிர் கொள்வதாகவும். இவ்வாறான கஸ்டங்களிகளில் மன அழுத்தங்கள் கொண்ட மனிதர்களாக மாறும் நிலை தோன்றியுள்ளதாகவும்.

இவ்வாறான மன அழுத்தங்களை விசேட தேவையுடைய பிள்ளைகளின் மேல் பெற்றோர்கள் திணிக்காமல் அவர்களை காத்துக் கொள்ளுவது பாரிய பொறுப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அவர்களுக்குள் அவர்கள் ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்றொரு தனித்துவமான மொழி, நடைமுறைகள் என பல்வேறு விடயங்களில் அவர்கள் வேறுபட்டும் காணப்படுகின்றார்கள். என்றும் தெரிவித்தார்.

அவர்களது புலனுறுப்புகள் அவர்களை சாதாரண மனிதர்களிலிருந்து பிரித்துக் காட்டினாலும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களை அவர்களாக பராமரித்துக் கொள்ள நாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க முற்பட வேண்டும். என்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ரயீஸ் தனது உரையில் மனித வாழ்வில் இடம்பெறக்கூடிய ஒவ்வொரு நிகழ்வும் அவனை இறைவன் பரிட்ச்சித்து பார்க்கும் ஒரு விடயமாகவே நாங்கள் நோக்க வேண்டும் உதாரணமாக அல்லாஹ் செல்வத்தைக் கொண்டு சோதிக்கிறான், அதேபோன்று கல்வி,வறுமை என்ற வரிசையில் இவ்வாறான மாற்றுத்திறனாளிகளைக் குழந்தைகளாக எங்களுக்கு தந்து எங்களது ஈமானை சோதிக்கின்றான் இவர்களை நாங்கள் ஒழுங்காக கவனித்து விட்டோம் என்றால் இவர்களே எங்களை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று தெரிவித்த வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ரயீஸ், முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் மாற்றுத்திறனளிகள் கற்கக்கூடிய ஒரு பாடசாலையை அமைத்து வழங்கவில்லை என வருத்தம் வெளியிட்ட அவர் முஸ்லிம் மாற்றுத்திரனாளிகள் மாற்று மத சகோதரர்களால் நடத்தப்படும் நிலையங்களுக்கு செல்வதால் குறித்த மாணவர்களுக்கு நமது சமயம் சார்ந்த விடையங்கள் போதிக்கபபடாமல் விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ரயீஸ், ஹியுமன் லின்க் நிறுவனத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளை பாராட்டி பேசினார்.

இங்கு மற்றொரு வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றிய உளவளத்துறை நிபுணர் வைத்தியர் யு.எல்.சஹாப்தீன், விசேட தேவையுள்ள/மாற்றுத்திறனுள்ள/குறைபாடுள்ளவர்கள்/கற்றல் திறன் குறைந்தவர்கள் என அழைக்கப்படும் இவ்வாறான குழுவினரை கவனித்து அவர்களுக்கு ஏற்றால்போல் அவர்களை நல்வளிப்படுத்தக்கூடிய வசதிகள் கொண்ட நிறுவனங்கள் சர்வதேச ரீதியில் இருந்த போதும் நமது நாட்டைப்பொறுத்தமட்டில் இவ்வாறான நிறுனனங்களும் நிறுவனங்களுக்கான வசதிகளும் குறைவாகே காணப்படுவதாக குறிப்பிட்டார்,
தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் யு.எல்.சஹாப்தீன் விசேட தேவையுடையவர்கள் யார் இவர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் எனக்கூறும் போது உடலியல் காரணி, உளவியல் காரணி மற்றும் சமூகக் காரணிகளால் மாற்றுத்திறனாளிகள் உருவாகுவதாக தெரிவித்தார்.

பிறக்கின்ற குழந்தைகளில் சில, சிறு சிறு குறைபாடுகளுடன் பிறக்கின்றன இருந்தபோதும், உடலியல் மற்றும் ஏனைய காரணங்களால் பிறக்கும் இக்குழந்தைகளை பெற்றோர் சரியான முறையில் பேனுவார்கலானால் சாதாரண மனிதனுக்கு உள்ளது போன்று இந்த குழந்தைக்கும் உள்ள இயற்கையான திறமையை கண்டு அவனை சமூகம் மெச்சத்தக்க ஒரு நட்பிரசையாக மாற்றமுடியும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கமும் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளை நல்வழிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனவே அவர்களை குறித்த இடங்களுக்கு கொண்டு சென்று உங்களது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு வளிசமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு வளவாளரான அஸ்சேக் என்.ஜி.ஏ கமால் தனது உரையில் விசேட தேவையுடைய குழந்தைகளை கவனிக்கும் நிலையானது சாதாரண குழந்தைகளை கவனிக்க 40% மான மன அழுத்தத்தையும் அதேவேளை விசேட தேவையுடைய குழந்தைகளை கவனிக்க 50% மான மன அழுத்தைதையும் பெற்றோர் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய என்.ஜி.ஏ கமால் எங்களுக்குள்ளும் விசேட தேவையுடைய குழந்தைகள் காணப்படுவதாகவும் அவர்களை பெற்றோர் சரியான முறையில் இனம் காணாததன் காரணமாக சாதாரண பிள்ளைகளுடன் இணைந்து அவர்களால் இயங்க முடியாதுள்ளதாகவும் பாடசாலைகளிலும் அவர்கள் சரியாகக இனம்கானப்படாததன் காரணமாக வாழ்க்கையை தொலைத்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருதமுனை விஜினி உட்பட பெரும்திரளான பெற்றோரும் விசேட தேவையுடைய குழந்தைகளும் கலந்து கொண்டனர். விசேட தேவையுடைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா